புதுச்சேரி வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ விழா : குதிரை வாகனத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2022 11:06
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான விழாவில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுச்சேரி காந்தி வீதியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றுத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று காலை 10.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரண்டாம் நாளான விழாவில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு தங்க சிம்ம வாகன புறப்பாடும் நடக்கிறது. நாளை (8 ம் தேதி )யாளி வாகனமும், திருமஞ்சனமும், ஹனுமந்த வாகன புறப்பாடும் நடக்க இருக்கிறது. வியாழக்கிழமை பல்லக்கு ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோலம், காலை 10 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7.30 மணிக்கு சேஷவாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 14ம் தேதி நடைபெறுகிறது. 15ம் தேதி கலச திருமஞ்சனம், சந்திரபிரபை வீதி புறப்பாடு, 16ல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 17ம் தேதி முத்து விமானமம், 18ம் தேதி புஷ்பபிரபை, 19ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. 20ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.