பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வளர்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி, திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், வளர்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.