மதுரை : மதுரை விளாச்சேரி அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ நாராயண ஜன சேவா டிரஸ்ட் ஸ்ரீ சைதன்ய விட்டர் மந்திர் வேத பாடசாலையில் 100 நாட்கள் யாகசாலை பூஜை நடக்கிறது.
பாடசாலையில் ருக்மணி, பாண்டுரங்கன், எந்திரம், தன்வந்திரி கணபதி பிரதிஷ்டை செய்வதற்காக சுவாமிகளுக்கு சக்தி ஏற்றவும், உலக நன்மை வேண்டியும் மே 6 முதல் ஆக. 13 வரை யாகசாலை பூஜை நூறு நாட்களுக்கு நடக்கிறது. தினம் ஒரு கோடி கிருஷ்ண மந்திர ஜபஹோமம் நடக்கிறது. பக்தர்கள் யாகசாலை பூஜையில் கலந்துகொண்டு வேண்டுதல்களை பிரார்த்திக்கலாம். என பாடசாலை குருக்கள் சங்கர்ஜி தெரிவித்தார்.