ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.20.72 லட்சம் காணிக்கை வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 03:06
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மாதந்தோறும், நிரந்தர மற்றும் தட்டுக்காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுகிறது. ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு நேற்று, காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 20 லட்சத்து, 72 ஆயிரத்து, 229 ரூபாய் காணிக்கை இருந்தது. கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, பேரூர் உதவி ஆணையர் விமலா தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது.