காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை முத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள பிரிசித்த பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோரும் வைகாசி மாதம் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீ மதி திருவிழா கடந்த மாதம் 29 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. மாலையில் வீதியுலா நடந்தது வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து லால்பேட்டை வெள்ளிங்கால் ஓடையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவில் வளாகத்திற்கு வந்தனர். பின்னர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீ மதித்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழாவில் லால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினர் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.