சிதம்பரத்தில் கரந்தை ஜெயகாந்தம் துரைக்கண்ணு அறக்கட்டளை சார்பில் சேக்கிழார் விழா நடந்தது.
சிதம்பரம் சேக்கிழார் மணிமண்டபத்தில் நடந்த விழாவில் சேக்கிழார் ஆராதனையும், அதனை தொடர்ந்து மயிலை சற்குருநாத ஒதுவார் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவிற்கு டாக்டர் அருள்மொழிசெல்வன் தலைமை தாங்கினார். மூர்த்தி வரவேற்றார். சேக்கிழார் அறக்கட்டளை சார்பில் பொன்னம்பலத்திற்கு தமிழ் செம்மல் விருதும், அனந்தீஸ்வரன்கோவில் சிவாச்சாரியர் வைத்தியநாதனுக்கு சிவாச்சாரிய செம்மல் விருதும், மயிலை சற்குருநாத ஒதுவார்க்கு திருமுறை இசை செம்மல் விருதை டாக்டர் சுரேஷ் வழங்கினார். மேலும் விருதாளர்களுக்கு 10 ஆயிரம் பணமுடிப்பு, வெள்ளி பதக்கம், மற்றும் பாராட்டு பத்திரம் அளிக்கப்பட்டது. செல்வம் நன்றி கூறினார். முன்னதாக நம்பியாண்டர் நம்பிகளின் குருபூசை ராகவன் சார்பில் நடந்தது.