கோவில்பாளையம்: வையம்பாளையம், முத்துமாரியம்மன் திருவிழாவில், நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. கொண்டையம் பாளையம் ஊராட்சி, வையம் பாளையத்தில் பழமையான முத்துமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 1ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. நேற்று மாலையில் அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும், பக்தர்கள் கரகம் எடுத்து வருதலும் நடந்தது. இதில் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை திருக்கல்யாண உற்சவம், மா விளக்கு மற்றும் அக்னி கரகம் எடுத்தல், தேர் இழுத்தல் நடைபெறுகிறது. 10ம் தேதி பரி வேட்டையும், 11ம் தேதி மஞ்சள் நீராடுதல் உடன் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஐயப்பா அறக்கட்டளை சார்பில், சிறுவர்களுக்கு தினமும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.