வடமதுரை: பாகாநத்தம் தூங்கணம்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூன் 5ல் கரகம் பாலித்தலுடன் துவங்கியது. மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி அழைத்தல் போன்ற வழிபாடுகள் நடந்தன. மஞ்சள் நீராட்டுடன் அம்மன்கள் கங்கையில் விடும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை ஊர் கவுடர்கள் வெள்ளைச்சாமி (தூங்கணம்பட்டி), பழனிச்சாமி (சின்னகுட்டியபட்டி) மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.