போரூர் : ராமநாதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தையடுத்து நேற்று சிவகாமசுந்தரி சமேத ராமநாதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ராமநாதீஸ்வரர் கோவிலில் மூன்றாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று சிவகாமசுந்தரி சமேத ராமநாதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. போரூரில், ராமர் வழிபட்ட பழமை வாய்ந்த ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மூன்றாம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவம், மே 31ல் துவங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று இரவு 7:00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத ராமநாதீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ராவணேஸ்வர வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.