Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் ஒரே நாளில் 105 ... கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு விமான சுற்றுலா கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் முதல்வர் தரிசனம்
எழுத்தின் அளவு:
வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் முதல்வர் தரிசனம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2022
10:06

வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரம் பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செல்வ முத்துக்குமார சுவாமியும், சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலத்தில் சுவாமி அம்பாளை தரிசித்து கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு  இன்று காலை தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவரை கோவில் சார்பில் தருமபுரம் ஆதீன கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார்.   தொடர்ந்து  எடப்பாடி பழனிச்சாமி சுவாமி, அம்பாள், செவ்வாய் மற்றும் செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் மூன்று தம்பதியினருக்கு திருமணம் செய்து வைத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சீர்காழி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ. பாரதி மகன் கார்த்திக் திருமணத்தை நடத்தி வைத்தார்.  முன்னாள் அமைச்சர் ஒ.எஸ். மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும்அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar