Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... கோயில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் கோயில் விழாவில் பக்தர்கள் தலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் பிரமோற்சவ விழா : தங்க காக வாகனத்தில் சனீஸ்வரன் வீதியுலா
எழுத்தின் அளவு:
திருநள்ளார் பிரமோற்சவ விழா : தங்க காக வாகனத்தில் சனீஸ்வரன் வீதியுலா

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2022
06:06

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் பிரமோற்சவ விழாவில் தங்ககாக வாகனத்தில் சனிஸ்வர பகவான் வீதி உலா நடந்தது.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த தினம் 27ம் தேதி முதல் 1ம் தேதி வரை விநாயகர் மற்றும் சுப்ரமணியன் உற்சவம்,கடந்த 2ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு,கடந்த 3ம் தேதி செண்பகதியாராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 7ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10ம் தேதி 5தேர் திருவிழா நடந்தது. நேற்று இரவு சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டது. பின் தங்க காகவாகனத்தில் எழுந்தருளிய சனிஸ்வர பகவான் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடந்தது. இவ்விழாவில் கட்டளை விசாரணை கந்ததசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar