ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் : முன்னேற்பாடு பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2022 05:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: இரண்டு வருடத்திற்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் ஆக 1ல் நடக்கிறது. இதற்காக தேரினை தயார்படுத்துவதற்காக நாள் செய்யும் விழா நேற்று நடந்தது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக தேரோட்ட திருவிழா நடைபெறவில்லை. தற்போது வழக்கம்போல் கோவில் திருவிழாக்கள் துவங்கியுள்ளது. இதனையடுத்து இந்த வருடம் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஆகஸ்ட் 1 தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு திருத்தேரினை தயார் படுத்துவதற்கான நாள் செய்யும் விழா நேற்று காலை 06:30 மணிக்கு கீழரத வீதியில் தேர் முன்பு நடந்தது. கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனையடுத்து தேரினை சீரமைக்கும் பணி துவங்கியது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள், திருவிழா மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர்.