கோயில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2022 06:06
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
10 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பெரிய கும்பிடு விழாவில் கொப்பைம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, ஓடைப்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, ஊத்துப்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஆரிய அரச குல வம்சத்தவர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் வம்சத்தவர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் விழா 3 நாட்கள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காப்புக் கட்டி 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் 61 பேர் தலையில் சம்பிரதாய முறைப்படி கம்பளியில் சுமந்து வந்த தேங்காயை எடுத்து பூசாரி பக்தர்கள் தலையில் உடைக்கச் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து சிறு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.