பதிவு செய்த நாள்
11
ஜூன்
2022
06:06
பரமக்குடி: பரமக்குடி அருகே முத்துவர்ணபுரம் மந்தை பிடாரி எனும் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் ஜூன் 9 அன்று காலை 9:00 மணிக்கு கிராம தேவதைகள் வழிபாடு, மாலை 6:00 மணிக்கு முதல் அனுக்கை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் நடந்து, முதல் கால யாக பூஜைகள், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 6:30 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜைகள் ஆரம்பமாகி, ஹோமம், கோ பூஜை, லட்சுமி பூஜை நிறைவடைந்து, மகா பூர்ணாஹுதிக்கு பின் புனித தீர்த்தக் குடங்கள் புறப்பாடாகின. தொடர்ந்து 10:00 மணிக்கு விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மன், முத்து விநாயகர், பாலமுருகன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை முத்துவர்ணபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.