பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள முருகனுக்கு வைகாசி விசாக திருவிழாவில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஜூன் 15 வரை நடக்கும். இதில் தினமும் தந்தப் பல்லக்கு என பல்வேறு வாகன புறப்பாடு நடைபெறுகிறது.ஜூன் 11ல் வள்ளி, தெய்வானை, சமேத முத்துக் குமாரசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டம் நேற்று மாலை 4:29 மணிக்கு துவங்கியது. தேரில் வள்ளி,தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி எழுந்தருள பக்தர்கள் அரோகரா பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை கஸ்துாரியும் தேர் சக்கரத்தை தள்ளியபடி உதவியது. மாலை 5:23 மணிக்கு தேர் நிலைக்கு வர இரவு தேர்க்கால் பார்த்தல் நடந்தது. எம்.பி., வேலுச்சாமி, கோயில் இணை ஆணையர் நடராஜன், பா.ஜ., வர்த்தக அணி மாவட்ட நிர்வாகி விஸ்வநாதன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.