இன்று மாலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலிலிருந்து காணொலி காட்சி மூலம் 108 திருவிளக்கு பூஜையை தொடக்கிவைத்தார். பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பித்தளை காமாட்சி விளக்கு, குங்குமச்சிமிழ், புடவை, மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி, உள்ளிட்ட 22 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன் மதிப்பு 800ரூபாய்.இதில் நான்கில் ஒருபங்கு 200ரூபாய் மட்டும் பக்தர்களிடம் பெறப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகல்,போட்டோ,2,மற்றும் கட்டணம் 200ரூபாய் செலுத்தி பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.பண்ணாரி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஈரோடு நாமக்கல், மண்டல இணைஆணையர் பரஞ்ஜோதி, பண்ணாரி கோவில் இணை ஆணையர் மேனகா,பவானிசாகர் எம்.எல்.ஏ.,பண்ணாரி, சத்தியமங்கலம் யூனியன் சேர்மேன் இளங்கோ, சத்தியமங்கலம் நகராட்சி சேர்மேன் ஜானகி, வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் நல்லசிவம்,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.