கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2022 05:06
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 48 முதுநிலை திருக்கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் சாய்வு தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு சக்கர நாற்காலிகள் கொள்முதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில்களில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பக்தர்கள் எளிதில் அறியும் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். கோவில் நுழைவுவாயில் அருகே 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அது ஒரு தனி பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.