பாலமேடு: பாலமேடு 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயிலில் கனி மாற்று விழா நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சாத்தாவுராயன் கோயிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க பெண்கள் பழ தட்டுகளுடன் ஊர்வலமாக அம்மன் கோயிலுக்கு வந்தனர். அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.