ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2022 10:06
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதேபோல் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை ராகுகால சமயத்தில் கோயில் வளாகத்தில் உள்ள ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை (செய்யும்) மண்டபங்களில் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆய்வு மேற்கொண்டதோடு பார்வையிட்டார். பூஜையில் ஈடுபடுபம் பக்தர்களிடம் அர்ச்சகர்கள் கட்டாய வசூலில் ஈடுபடக்கூடாது என்று கண்டித்ததோடு உத்தரவிட்டார்.மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.