இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இடிதாங்கி பொருத்தப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2022 10:06
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சாலகோபுரத்தில் இடி தாங்கி பொருத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , சட்டமன்றத்தில் பக்தர்கள் பாதுகாப்புக்காக கோவில்களில் இடி தாங்கிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரதானசால கோபுரவாசலில் ரூ 1.60 லட்சம் செலவில் பக்தர்கள் நலனிற்காகவும், கோவில் பாதுகாப்பிற்காகவும் இடிதாங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 150 மீட்டர் தூரம் விழும் இடிகளை இந்த இயந்திரம் கவர்ந்திழுக்கும் திறனுடன் அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.