ஸ்ரீபெரும்புதுார்: சோமங்கலம் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் பாலாலயம் சம்ப்ரோக்ஷணம் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் சோமங்கலம் கிராமத்தில், 950 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்திரவல்லி தயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குடமுழுக்கு நடந்து 22 ஆண்டுகள் ஆனது. இதனால் புனரமைப்பு பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய ஹிந்து அறநிலைய துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கலச மஹாஸந்தி, திருமஞ்சனம், சாற்றுமுறை தீர்த்த பிரசாத வினியோகம் செய்யப்பட்டது.நேற்று காலை கோ பூஜை, கும்ப ஆராதனை ஹோமம், மஹா பூர்ணாஹூதி, பாலாலய சம்ப்ரோக்ஷ்ணம் செய்யப்பட்டது. இதில், ஹிந்து அறநிலைய துறை அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.