அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் சுந்தர நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் எஜமான சங்கல்பம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமமும், இரண்டாம் நாள் யாக பூஜை, பூர்ணாகுதியும், நேற்று காலை மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9 30 மணிக்கு , கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. சுந்தர நாச்சியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.