நிலக்கோட்டை: அணைப்பட்டி அருகே குருவித்துறை ரோட்டில் அமைந்துள்ள சந்தான சீதளா தேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. புதிதாக சிவனுக்கு சிலை, காலபைரவர் சிலை பிரதிஷ்டை செய்து, மூலவரான சந்தான சீதளாதேவிக்கு கோபுரம் அமைக்கப்பட்டு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ராகவன் குருஜி தலைமையில் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். சமய சொற்பொழிவுகள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. கிராமத்தினர் பங்கேற்றனர் அன்னதானம் நடந்தது.