பதிவு செய்த நாள்
21
ஜூன்
2022
08:06
உடுமலை: குருவப்பநாயக்கனுார் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவிலில், பத்தாம் ஆண்டு விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். உடுமலை ஊராட்சி ஒன்றியம் குருவப்பநாயக்கனுாரில், புகழ்பெற்ற ஸ்ரீவலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில், தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இக்கோவிலின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, ஜலவிநாயகர், வலம்புரி விநாயகர் மற்றும் பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அலங்கார பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, பிரசாதம் வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குருவப்பநாயக்கனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் குருவப்பநாயக்கனுார் கிராம மக்கள் செய்திருந்தனர்.