கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. நந்திவரம் - கூடுவாஞ்சேரி, ஜெயலட்சுமி நகரில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள், சில நாட்களுக்கு முன் முடிந்தன. தொடர்ந்து கும்பாபிஷேக பூஜை நடந்து வந்தது.நேற்று காலை 6:00 மணி முதல் கோ பூஜை, ஹோமம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:45 மணிக்கு கோவில் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு கலசத்திற்கு, கும்பகோணம் திப்பிராஜபுரம் வெங்கடேச சிவாச்சாரியார் குழுவினர், வேத மந்திரங்கள் முழங்கி, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், திருப்பணி குழுவினர் மற்றும் நந்திவரம்- - கூடுவாஞ்சேரி மக்கள் செய்தனர்.