திருச்செந்துார் கோயிலில் மூத்த குடிமக்களுக்கு தனிப்பாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2022 11:06
திருச்செந்துார்: தினமலர் செய்தி எதிரொலியால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. கோர்ட் உத்தரவுப்படி கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டணப்பாதையில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் காத்திருக்கும் அறை : இதனால் விழா நாட்கள் ற்றும் விடுமுறை நாட்கள் டுமின்றி சாதாரண நாட்களிலும் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டு பக்தர்கள் அவதியடைந்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் 20ம் தி தினமலரில் ளியான செய்தியில், பக்தர்கள் அவதியடையாமல் இருக்க கோயில் வளாகத்தில் தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் அறைகள் அமைத்தும், ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்தும் தரிசனம் செய்தால் பக்தர்களின் சிரமம் தவிர்க்கப்படும் என்றும், மூத்த குடிமக்கள் ற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்செந்துார் வந்த அறநி லையத் துறை அமைச்சர் கர்பாபு, கோயில் வளாகத்தில் தரிசன வரிசைகளில் 250 பேர் அமர்ந்து செல்லும் வகையில், மின் விசிறி, குடிநீர், கழிப்பறை வசதியுடன் கூடிய 12க்கும் மேற்பட்ட காத்திருக்கும் அறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
மூத்தக்குடி மக்களுக்கு தனி தரிசன வழி : தினமலரின் அடுத்த கோரிக்கையான மூத்த குடிமக்களுக்கு தனி வழிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. இதற்காக தற்போது மூத்தக்குடி மக்கள் விரைவு தரிசனம் செய்திட வசதியாக தனிப்பாதையை அமைத்துள்ளது. கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் துலாபாரம் வாசல் வழியில் அமைக்கப்பட்டுள்ள தனி வரிசையில் இருக்கைகள் டு மூத்த குடிமக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவர். இவ்வரிசையில் வரும் மூத்த குடிமக்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்திட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றினை காண்பித்து தரிசனம் செய்திடலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இதனை பெரிதும் வரவேற்றுள்ளனர். மேலும் தொடர்ந்து பக்தர்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு, செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழையும் பாராட்டி வருகின்றனர்.