கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சன்னதியில் பிரதோஷ விழா நடந்தது.
விழாவையொட்டி விஸ்வநாதருக்கு பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யாபட்டி, கோபால்பட்டி, மொட்டையகவுண்டன்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் பஜனையில் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ விழா சிறப்பு பூஜைகள் நடந்தது.