சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது.
* சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது.