பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
10:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி, வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரத்துடன் துவங்கியது.
தஞ்சை பெரிய கோவிலின் தெற்கு புறத்தில் மகா வாராஹி சன்னதி உள்ளது. வாராஹி அம்மனை போர்களுக்கு செல்லும் போது மாமன்னன் ராஜராஜசோழன் வணங்கிச் சென்றதாக வரலாறு உண்டு. மிகவும் பழமையான வாராஹிக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு இன்று(28 ம் தேதி) காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வாராஹி ஹோமம், ஆகியவை நடந்தது. முதல் நாளில், இனிப்பு அலங்காரத்துடன் விழா துவங்கியது. நாளை(29ம் தேதி) மஞ்சள் அலங்காரம், 30ம் தேதி குங்குமம், ஜூலை 1ம் தேதி தேதி சந்தனம், 2ம் தேதி தேங்காய்ப்பூ, 3ம் தேதி மாதுளை, 4ம் தேதி நவதானியம், 5ம் தேதி வெண்ணெய், 6ம் தேதி கனி வகை, 7ம் தேதி காய்கறி, 8ம் தேதி புஷ்பம் என அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 8 முதல் 10 மணி வரை சிறப்பு வாராஹி ஹோமும், 10 முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பஞ்சமி தினமான 3ம் தேதி காலை பஞ்சமி அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பஞ்சமி குழுவினரால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடக்கிறது. 8ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.