தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவி குங்கும காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு வாகனத்தில் இரவிலும் பகலிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் நாளான இன்று மாலை குங்கும காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரில் பவனி வந்தார். தேரோட்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் திருவிழா நடக்காத நிலையில் இன்று நடந்த தேரோட்ட விழாவில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. தேரோட்டம் முடியும் நிலையில் கண்டதேவியில் மட்டும் லேசான மழை பெய்தது.