குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் கால்நாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 12:06
ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு விழா நடந்தது. ஆனிப் பெருந்திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற கோயில் களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இக் கோயிலில் இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் குரங்கணி பங்கு நாடார் பொதுமக்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது. வரும் 11ம் தேதிமுதல் 19ம் தேதி வரை முத்துமாலை அம்மன் தங்கத்திருமேனி விசேஷ அலங்காரத்துடன் காட்சியளிப்பார். விழாவினை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர், குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.