திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் ஆடி பவுர்ணமி பூஜை வழிபாடு நடந்தது. கரிவலம்வந்தநல்லூர் மேலரத வீதியில் உள்ள பிரம்மஸ்ரீ சிவராஜயோகி சுவாமிகள் ஜீவசமாதி கோயிலில் ஆடி பவுர்ணமி பூஜை வழிபாடு நடந்தது. அன்று இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, பூஜை வழிபாடு நடந்தது. தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆன்மீக சொற்பொழிவு, நடுவூர் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குதல் ஆகியன நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவசங்கரன் செய்திருந்தார்.