பதிவு செய்த நாள்
09
ஆக
2012
10:08
செஞ்சி : செஞ்சி அடுத்த சே.பேட்டை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி தாலுகா சே.பேட்டையில் புதிதாக செல்வ விநாயகர், காமாட்சியம்மன், கங்கையம்மன் கோவில் கட்டியுள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமமும், 6 மணிக்கு வாஸ்த்து சாந்தி, ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம் செய்தனர். நேற்று காலை 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 10.45 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது.இதில் எல்.எல்.ஏ., கணேஷ்குமார், பேரூராட்சி தலைவர் மஸ்தான், முன்னாள் எம். எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சே.பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.