ஆழ்வார்குறிச்சி : கடையம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நாளை (10ம் தேதி) வாசுகிரி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. கடையத்திலிருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் வாசுகிரி முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கிருத்திகை நாளில் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சார்பில் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். இவ்வருடம் நாளை (10ம் தேதி) மதியம் 12 மணியளவில் சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணியளவில் விசேஷ அலங்காரத்தில் தீபாராதனையும், 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கடையம் ஊராட்சி ஒன்றிய விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.