காளையார்கோவில்: காளையார்கோவில் முத்துமாரியம்மன்கோவில் ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு 53 வது மது எடுப்பு விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் மதுக்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மன் குளத்தில் கரைத்தனர். அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,பொதுமக்கள் செய்து வருகின்றனர்.