செலையனூர் சிவலிங்கேஸ்வரர், நவநீத கிருஷ்ணர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 05:07
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், செலையனூர் கிராமத்தில் எழுந்தளுளியூருக்கும் சக்தி விநாயகர், பாலமுருகர், சிவபார்வதி உடனுறை சிவலிங்கேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தன சிவலிங்கேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதியும், ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் 10ம் தேதியும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, வரும் 8 ம்தேதி காலை 9.00 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், முதல் யாக சாலை பூஜை நடைபெறுகிறது. 9ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் சக்தி விநாயகர், பாலமுருகர், சிவபார்வதி உடனுறை சிவலிங்கேஸ்வரர் கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10ம் தேதி காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்கு ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறு்கிறது.