திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் ஜூலை 4ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 05:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்ஸ விழா ஜூலை 4ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. திருவிழா நடைபெறும் ஜூலை 12 வரை தினம் மாலை 6:00 மணிக்கு திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்படும் ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ஊஞ்சல் ஆட்டம் நடக்கும். பின்பு ஆசான மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று சேர்த்தி செல்வர். ஜூலை 13ல் உச்சிக்கால பூஜையின் போது சுவாமிகளுக்கு மா, பலா, வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜை நடைபெறும். திருவிழா நடைபெறும் நாட்களில் தங்கரதம் புறப்பாடு நடைபெறாது. என கோயில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.