பதிவு செய்த நாள்
01
ஜூலை
2022
05:07
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் அருகே திருத்தேர்வளை, ஆனந்தவள்ளி அம்பிகை சமேத, ஆண்டு கொண்ட ஈஸ்வரர், பைரவர் திருக்கோயில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர, கணபதி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்பு கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.