அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 05:07
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா துவங்கியது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமயநிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மீனாட்சி சொக்கநாத சாமி கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா காலை 9.30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில், மீனாட்சி, சொக்கநாதர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாளிப்பர். பத்தாம் நாள் விழாவாக இந்த மாதம் 10 ம், தேதி திருக்கல்யாணம் நடைபெறும். அருப்புக்கோட்டை மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண வருவர். பதினோராம் நாள் விழாவாக மாலை 5 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். தேரோடும் வீதிகளில் மீனாட்சி, சொக்கநாதர் ஊர்வலமாக வருவர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.