பதிவு செய்த நாள்
02
ஜூலை
2022
04:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, திப்பம்பட்டி வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.பொள்ளாச்சி, திப்பம்பட்டி மும்மூர்த்தி ஆண்டவர் வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா கடந்த, 29ம் தேதி துவங்கியது. காலை, 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு கங்கணம் கட்டப்பட்டு, ஹோமம், அபிேஷக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி பத்து நாட்களுக்கு ேஹாமங்கள், அபிேஷக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. இனிப்பு அலங்காரம், மஞ்சள், குங்குமம், சந்தனம், மாதுளை, தேங்காய் பூ, நவதானியம், வளையல் மற்றும் விஷ்வ ரூப தரிசன அலங்காரம் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
வெள்ளிக்கிழமை வழிபாடு: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகளவு பக்தர்கள் வருகின்றனர். நேற்று, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. காலை, 6:30 மணி, 11:30, மாலை, 4:00 மணி, 6:30 மணிக்கு நான்கு கால பூஜைகள் நடந்தது. பக்தர்கள் மனமுருகி அம்மனை தரிசித்தனர்.