பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
10:07
சிவகிரி: வாசு தேவ நல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 11ம் தேதி ம், 12ம் தேதி உற்சவம் நடக்கிறது. வாசுதேவநல்லூரில் இடப்பாகவல்லி அம்பாள் சமேத சிந்தாமணிநாதர் சுவாமி (எ) அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமான் உமையொரு பாகனாக உருவம் தரித்து, அருள் வழங்கும் ஸ்தலங்கள் தமிழகத்தில் 2 மட்டுமே உள்ளது.
அந்த தலங்களில், வாசுதேவநல்லூர் கோயில் ஒன்றாகும். பழமை வாய்ந்த இக்கோயிலில் இந்தாண்டுக்கான ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 11 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடந்தது. கொடியேற்ற மண்டகப்படிதாரார் குருமலை சவுந்தரராஜன், அன்னதான மண்டகப்படி தேசியம்பட்டி கணபதி தேவர், நிர்வாக அலுவலர் (பொ) அசோக் குமார் மற்றும் மண்டகப்படிதாரர்கள், உபயதாரர்கள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரவில் பூங்கேடயத்தில் சுவாமி அம்மையப்பர் திருவீதி உலா ற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 11ம் தி நடக்கிறது. மண்டகப்படிதாரர் எஸ்.தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தங்கபழம் குடும்பத்தினர் சார்பில் மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 12ம்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் இளங்கோவன் ஆோசனையின் பேரில், நிர்வாக அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமார் மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள், ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.