தட்சிணாமூர்த்தி தெற்கிலும் துர்க்கை வடக்கிலும் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2022 02:07
தட்சிணாமூர்த்தி ஞான வடிவமானவர். வேதம் முதலிய ஞான நுõல்களை உபதேசிப்பவர். உபதேச குருவாக சிவன் வீற்றிருக்கும் நிலையே தட்சிணாமூர்த்தி. தட்சிணம் என்றால் தெற்கு. உபதேசிக்கும் போது தென்முகக் கடவுளாக காட்சியளிக்கிறார். துர்க்கை தீய சக்திகளைப் போரிட்டு அழித்ததால் கோபவடிவில் வீற்றிருக்கிறாள். உக்ர தெய்வங்கள் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். இந்த நியதி சுவாமியின் கருவறையைச் சுற்றிஉள்ள கோஷ்டங்களுக்கான பொதுவிதி. துர்க்கை, காளி, மாரி போன்ற தெய்வங்கள் தனி கோவில்களில் பிரதிஷ்டை செய்யும் போது மட்டும் கிழக்கு நோக்கி வைக்கலாம் என்கிறது சாஸ்திரம்.