பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
06:07
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் 6 மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும், ஆனி மாத ஆனித் திருமஞ்சன திருவிழாவும் வெகு விமர்சியாக நடைபெறும்
இந்நிலையில் இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த மாதம் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடங்கியது. தினமும் காலை, மாலை இரு வேளைகளும், பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. ஜூலை 1ஆம் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா 5 ம் தேதியும், மறுநாள் 6ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெற உள்ளது. விழாவில் இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அதனை தொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சிதம்பரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தேர் திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் கீழ வீதியில் தேர்களை நிறுத்தி இருக்கும், தேரடியில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களை சரி செய்து புதுப்பித்து அலங்கரிக்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். விழா நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு குறித்து டிஎஸ்பி ரமேஷ் ராஜ் , பொது தீட்சிதர்கள் கோவில் வளாகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது, போது, காளி திருமஞ்சன விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மேற்கு கோபுரவாயில் மற்றும் வடக்கு கோபுரவாயில் வழியாக உண்மையை அனுமதிக்கப்படுவார்கள் எனவும், தரிசன விழா முடிந்து பக்தர்கள் கிழக்கு மற்றும் தெற்கு கோபுரம்வாயில் வழியாக வெளியில் செல்ல வேண்டுமென போலீசார் தெரிவித்தனர். மேலும் தீட்சிதர்கள் சார்பில் நான்கு மணிக்குள் தரிசன விழாவை விரைந்து முடித்து கொள்வாதா தெரிவித்தனர்.