சாக்கோட்டையில் பால்குடத் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2022 06:07
சாக்கோட்டை: சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு நேற்று பால்குடத் திருவிழா நடந்தது.
சாக்கை உய்யவந்தம்மன் கோயில் ஆனித்திருவிழா கடந்த ஜூன் 28ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஜூன் 30 ஆம் தேதி அம்மன் புதுவயல் நகருக்குள் எழுந்தருடன் நிகழ்ச்சி நடந்தது. தினமும் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி, கரும்புத் தொட்டில் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா நேற்று நடந்தது. தினமும் காலை மற்றும் இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலையும், நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.