* தீவிரமாக தேடினால் எதுவும் கிடைக்கும். * எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார். * பிறரை வஞ்சித்துவிட்டு, ‘விளையாட்டுக்குச் செய்தேன்’ என சொல்பவர் பைத்தியக்காரர். * தான் வெட்டின குழியில் தானே விழுவர். * தான் புரட்டின கல் தன் மேலேயே விழும். * நேர்மையாளரின் கருத்துக்கள் நியாயமானவை; பொல்லாதவரின் திட்டங்கள் வஞ்சகமானவை. * கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். * ஒளிதான் எல்லா நன்மைகளையும், உண்மைகளையும் விளைவிக்கிறது. – பொன்மொழிகள்