குளக்கரையில் ஜோசப் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அருகில் இருந்த எருமை மாடு அவனை உரசியதால், அவனது ஆடையில் சேறு படிந்தது. உடனே ஆடையை சுத்தம் செய்தான். சாதாரண ஆடைக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால்... நம் மனதிற்கு? கோபம், காமம், பேராசை, பொறாமை போன்ற குணங்களால் மனம் பாழாகிறது. இதை பலர் கண்டுகொள்வது இல்லை. ஆடையை ஒருமுறை சுத்தம் செய்தாலே போதும். மனம் அப்படி அல்ல.. தினமும் அதை நல்ல எண்ணத்தால் சுத்தப்படுத்த வேண்டும். அந்த நல்ல எண்ணத்தை ஆண்டவரால் கொடுக்க முடியும். நல்லதை நினைப்போம். நல்லதை பெறுவோம்.