சுற்றிலும் நீலக்கடல். மிதமான காற்று. ஆங்காங்கே மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி. உங்களுடன் பேச யாருமே இல்லாத நிலை. அப்போது உங்கள் மனம் எப்படி இருக்கும். அந்த தனிமை அலாதியானது. இதுவே மனக்குறையை போக்கும் அருமருந்தாகும். எப்படி என கேட்கிறீர்களா.. தனிமையில் இருக்கும்போதுதான் ஒருவர் தன்னுடைய குறை, நிறைகளை பற்றி ஆராய்வார். வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது என்று புரியும். மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று தோன்றும். எப்போதெல்லாம் வருத்தமாக இருக்கிறீர்களோ.. அப்போது மலையேற்றம், கடற்பயணத்தை மேற்கொள்ளுங்கள். இயற்கையின் அழகை ரசித்தால், மனதில் நிம்மதி குடிகொள்ளும்.