திருவட்டாறு கோயில் கும்பாபிேஷகம்: ஹிந்து அல்லாதவர்களுக்கு தடை கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2022 04:07
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபி ேஷகத்தில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கன்னியாகுமரி விளைவீடு சோமன் தாக்கல் செய்த பொதுநல மனு: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதை தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். குமாரகோவில் வெளிமலை குமாரசுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தல் அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜ், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன் பெயர்கள் இடம் பெற்றன. ஹிந்துக்கள் அல்லாத அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி, என சட்டம், விதிகளை மதித்து கருத்து தெரிவித்துள்ளார்.திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபி ேஷகம் நாளை (ஜூலை 6) நடக்கிறது. அது 108 வைணவ தலங்களில் ஒன்று. விழா அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் இடம் பெற்றுள்ளது. ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை தொடர்ந்து கோயில்களுக்குள் அனுமதிப்பது விதிகளுக்கு புறம்பானது. கோயில்களின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படும்.
ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபி ேஷகத்தில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு சோமன் குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ேஹமலதா அமர்வு விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பு: இது பொது நிகழ்ச்சி. இதில் பங்கேற்பதிலிருந்து யாரையும் தடுக்க முடியாது. வெளிநாட்டினர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகின்றனர். வேளாங்கண்ணி சர்ச்சிற்கு ஹிந்துக்கள் செல்கின்றனர் என தெரிவித்தது.
நீதிபதிகள்: வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காண்பது சாத்தியமற்றது. பிற மதங்களை சேர்ந்தவர்கள் ஹிந்து கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்து கோயில்களுக்கு வருவதை தடுக்க முடியாது.பாடகர் யேசுதாஸ் பிறப்பால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவர் பல ஹிந்து கடவுள்களுக்காக பக்தி பாடல்கள் பாடியுள்ளார். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சிற்கு ஹிந்துக்கள் செல்கின்றனர். கும்பாபிேஷகம் பொதுவான விழா. அதில் பங்கேற்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காண முடியாது. அவரவர் நம்பிக்கை அடிப்படையில் கோயில், சர்ச், மசூதிகளுக்குச் செல்கின்றனர்.இதை குறுகிய வட்டத்திலிருந்து பார்க்காமல், தொலைநோக்கு பார்வையுடன் நீதிமன்றம் கையாள்கிறது. இவ்வழக்கு தகுதி அடிப்படையில் ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.