அங்குரார்ப்பணம், முளையிடுதல், ஆலயசுத்தி புண்யாஹம், அத்தாழ பூஜை நடைபெற்றது. ஜூலை 1ம்தேதி கணபதி ஹோமம், ப்ரோக்தஹோமம், முளைபூஜை, பிம்பசுத்தி, கலசபூஜை, பிம்பசுத்தி கலசாபிஷேகம், உச்சி கால பூஜை, ஹோமகுண்டசுத்தி, முளைபூஜை, அத்தாழ பூஜை நடந்தது. 3ம்தேதி கணபதிஹோமம், நாய்சாந்தி ஹோமம்,ரத்தசாந்தி ஹோமம், வாகன பக்கிரகம், ஜலாதிவாசம், தீபாராதனை, தபஸ்யாமிருதம் நடனப்பள்ளி சார்பில் நாட்டிய சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. 4ம்தேதி தத்துவஹோமம், தத்துவ கலசம், ப்ரம்மகலச பூஜை, மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை அதிவாசம் விடுவித்து பூஜை, கலசங்கள் அலங்காரமாக எடுத்து சென்று தானம் முஹீர்த்த தானம், தவஜபிரதிஷ்டை கலசாபிஷேகம் அதைதொடர்ந்து கொடியேற்றப்பட்டது. இரவு எஸ்.ஆர்.டி.,கார்னரிலிருந்து சர்வ அலங்காரத்துடன் ஐயப்பன் சுவாமி அலங்கரிக்கப்பட்டு யானை மேல் அமர்ந்து காவடி,தெய்யம்,சிங்காரி மேளத்தோடு, பூதன் திறை, ஆகியவற்றுடன் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் சென்று, கொடியிரக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.