வழித்துணை தொட்டில் அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 08:07
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் உள்ள வழித்துணை தொட்டில் அம்மன் ஆலயம், வினாயகர், காலபைரவர், கருப்புசாமி, முனீஸ்வரர், ஆஞ்சநேயர், ராகு, கேது ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை மஹா பூர்ணாஹூதி முடிந்து, கலசத்தில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பொன்னரசு செய்திருந்தார். வேப்பூர் திருநாவுக்கரசர் திருமடத்தின் மடாதிபதி தங்கதுரை விழாவை நடத்தி வைத்தார். மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணாசங்கர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.